தூத்துக்குடியில் இருந்து மீன், நொறுக்கு தீனிகள் பார்சலாக குவிகிறது! வியாபாரிகள் மத்தியில் வரவேற்பு அதிகரிப்பு!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது.
பஸ் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் பார்சல் புக்கிங் செய்யப்படுகிறது. அரசு விரைவு பஸ்களில் பார்சல் சேவை கடந்த 3-ந்தேதி முதல் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் பார்சல் முன்பதிவு செய்யப்படுகிறது. முதலில் பஸ் டெப்போவில் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது பொதுமக்கள் எளிதாக புக்கிங் செய்யும் வகையில் பஸ் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் பார்சல் புக்கிங் செய்யப்படுகிறது.

விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த செலவில் அரசு விரைவு பஸ்களில் பார்சல் அனுப்பி வருகின்றனர். காய்கறிகள், பழங்கள், தின்பண்டங்கள், பால் பொருட்கள் அதிகளவு பார்சலில் செல்கின்றன. ஆரம்பத்தில் தினமும் ரூ.10 ஆயிரம் வருவாய் கிடைத்த நிலையில் தற்போது ரூ.15 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

அரசு விரைவு பஸ்களில் குறைந்த கட்டணத்தில் பார்சல் அனுப்புதல் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின் படிப்படியாக பார்சல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் பார்சல் அனுப்புகிறார்கள்.

குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து மீன், தின்பண்டங்கள் அதிகளவில் பார்சலாக வருகிறது. சேலத்தில் இருந்து பன்னீர் பார்சல் அதிகமாக செல்கின்றன. பொதுமக்கள் தாங்கள் வீட்டில் இருந்தபடியே அரசு போக்குவரத்து கழக செயலி மூலம் பார்சல் முன்பதிவு செய்யலாம். பிற நகரங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கும் விரைவாக பொருட்களை அனுப்பும் வசதி இருப்பதால் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-வேல்முருகன், தூத்துக்குடி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp