தூத்துக்குடி சேர்வைகாரன்மடம் பகுதியில் வணிக நோக்கத்தில் சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்ட 5 நிலத்தடி நீர் ஆழ்குழாய் கிணறுகளை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சீல் வைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் சேர்வைகாரன்மடம் நிலத்தடி நீர் விற்பனை: 5 ஆழ்குழாய் கிணறுகளை சீல் வைக்க ஆட்சியர் உத்தரவு.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் சட்டத்திற்கு புறம்பாக அனுமதியின்றி இயங்கி ஏற்கனவே தடைசெய்து சீல் வைக்கப்பட்ட ஆழ்துளாய் கிணறுகளில் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுத்திட கோரி 25.07.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்கள் வழங்கிய மனுவின் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (02.08.2022) சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் சர்வே எண் 295/2, 295/4, 25/3, 284/2டீ3 ஆகிய பகுதிகளில அனுமதியின்றி செயல்பட்டு வந்த 5 ஆழ்துளாய் கிணறுகளின் செயல்பாடுகள் துண்டிக்கப்பட்டு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன் (கி.ஊ),ராமராஜ் (வ.ஊ), தூத்துக்குடி வட்டாச்சியர் செல்வகுமார் மற்றும் சாயர்புரம் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா, மேலும் சேர்வைக்காரன்மடம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், ஊராட்சி செயலர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.