கோவை மாவட்டம் ஆனைமலை பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு நிலக்கடலை பயிர்கள் வளர்ச்சி அடைந்த நிலையில் தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், போதிய மகசூல் இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து விவசாயி கூறுகையில், நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிலக்கடலை பயிரிடுவது வழக்கம். இந்த வகையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிலக்கடலை சாகுபடி செய்தோம் நிலக்கடலை சாகுபடியை பொறுத்தவரை விதைப்பு, களை எடுத்தல், மண் அணைத்தல், விதை கடலை உடைத்தல் என பல வேலைகள் உள்ளன.
எனவே சென்ற ஆண்டைப் போல விலை இல்லாமல் இந்த ஆண்டு கொள்முதல் விலை அதிகரிக்க வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது என்று கூறினார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-அலாவுதீன்.