நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே அமைந்துள்ளது தொட்டபெட்டா சிகரம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டாவில் முகாமிட்டு இயற்கை காட்சிகளையும் பள்ளத்தாக்கு பகுதிகளையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காட்சி கோபுரத்திற்கு கீழ்ப்பகுதியில் பாறைகள் நிறைந்த ஆபத்தான சரிவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியை தாண்டிச்சென்ற பெண்மணி ஒருவர் உச்சியில் இருந்து கீழே குதிக்க தயாராக இருக்கிறார். விபரீதத்தை உணர்ந்த சுற்றுலாப் பயணிகள் கூக்குரல் எழுப்பி சத்தம் போட்டு உள்ளனர்.
நோ நோ என கத்தியுள்ளனர். அதனை பொருட்படுத்தாமல் நொடிப்பொழுதில் பாறையில் இருந்து குதித்துள்ளார். இந்த பதற வைக்கும் காட்சியை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
அங்குள்ள மக்கள் இந்த தகவலை காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு துறையினரும் காவல் துறையினரும் விரைந்து வந்து பள்ளத்தாக்கு பகுதியில் கயிறு கட்டி இறங்கி உடலை தேடும் பணியை மேற்கொண்ட போது சுமார் 500 அடி பள்ளத்தில் உடல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடலை மேலே கொண்டு வரும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் இதுபற்றிி கூறுகையில்:
கீழே குதித்த அந்தப் பெண்மணி ஆனவர் ஊட்டியில் இருந்து ஆட்டோ எடுத்துக் கொண்டு தொட்டபெட்டா சிரத்துக்கு வந்துள்ளார். அங்கு தான் கொண்டு வந்த பையை ஒரு பாறையின் மீது வைத்து விட்டு தடுப்பு வேலியை தாண்டிச் சென்று திடீரென குதித்துள்ளார். அவர் கொண்டு வந்த பையை கைப்பற்றி சோதனை இட்டதில் அந்தப் பெண்ணுடைய ஆதார் அட்டை இருந்துள்ளது.
அதில் தற்கொலை செய்து கொண்ட அந்தப் பெண் கோவை மாவட்டம் தடாகம் கணுவாய் ராகவேந்திரா நகர் பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மனைவி லீலாவதி(62) என்பது தெரிய வந்துள்ளது. பையில் ரூபாய் 16 ஆயிரத்து 500 பணமும் இருந்தது. என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பாட்ஷா, திருப்பூர்.