கேரளா மாநிலம் மூணார் கிராம பஞ்சாயத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தேயிலை தொட்ட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இங்கு வசிக்கும் மக்களுக்கு இலவசமாக இடம் வழங்க கோரி சட்டசபையில் நேற்று மூணார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஏ.ராஜா அவர்கள் கேள்வி எழுப்பினார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு இலவச வீட்டு மணை பட்டா அளிப்பதை பற்றி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்ற துறைகளோடு கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
–ஜான்சன் மூணார்.