மின்சார சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின் ஊழியர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாடாளுமன்றத்தில் இன்று மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இதை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த சட்டதிருத்தத்தில், மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, அதிகபட்ச மின்கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. மேலும், புதிய சட்டத்திருத்தத்தின்படி இலவச மின்சாரம் முற்றாக தடைசெய்யப்படும். மின்விநியோகத்தில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இருக்காது. மாநில அரசுகளிடம் உள்ள மின்விநியோகம் முழுவதையும் தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை மோடி அரசு எடுத்துள்ளது.
இதனால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்படும் என்றாலும் மிக மோசமான பாதிப்பை தமிழ்நாட்டு மக்கள் சந்திப்பார்கள். விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாகும். வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் அதோகதியாகும். தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள ஒட்டுமொத்த மின் இணைப்பில் 22 லட்சம் மின் இணைப்புகள் விவசாயத்திற்கும், 11 லட்சம் மின் இணைப்புகள் குடிசை வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதே போல விசைத்தறி தொழிலுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தப் புதிய சட்டத்திருத்தத்தின்படி இலவச மின்சாரம் முற்றாக தடைசெய்யப்படும். மின்விநியோகத்தில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இருக்காது. மக்களின் வரிப்பணத்தால் உருவாக்கப்பட்ட மின்சார கட்டமைப்பை ஒட்டுமொத்தமாக தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துவிட்டது ஒன்றிய அரசு. தொலைத்தொடர்புத் துறை போல இனி மின்சாரத் துறையும் மக்களை சுரண்டும் துறையாக முற்றாக மாற்றப்பட்டுவிடும். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடிவடிக்கை குழு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுவருகிறது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி உபகோட்ட மின்வாரிய அலுவலகத்தில் இன்று 50க்கும் மேற்பட்ட மின் வாரிய ஊழியர்கள், மத்திய அரசின் முடிவைக் கைவிடக் கோரி பணி முடக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின் துறையை தனியாருக்கு தரைவார்க்கும் மின்சார சட்டத்தை திருத்தம் செய்யக்கூடாது, தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தம் செய்யக்கூடாது, உழைக்கும் வர்க்க தொழிலாளிக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளுக்கு வழிகாட்டிலும் சட்டங்களை திருத்தம் செய்யக்கூடாது போன்ற கண்டன முழக்கங்களுடன் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் கழகம், பொறியாளர் சங்கம் மற்றும் தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், மின் ஊழியர் மத்திய அமைப்பு உள்ளிட்ட கூட்டமைப்பினர் சார்பாக பணி முடக்க கண்டன போரட்டத்தில் மின்வாரிய பொறியாளர் கழக மாவட்ட செயலாளர் சாத்தப்பன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க கோட்டத் தலைவர் ராஜசேகர், மின் ஊழியர் மத்திய அமைப்பு கோட்டச் செயலாளர் பாஸ்கரன் மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.