மனிதநேய ஜனநாய கட்சியின் கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் M.H. அப்பாஸ் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலைக்காக, செப் 10 அன்று மஜக முன்னெடுக்கும் தலைமைச் செயலக முற்றுகை ஆயத்த பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் மாவட்டம் முழுக்க சுவர் விளம்பரங்கள் வரைவது குறித்தும், ஆட்டோக்களில் ஃப்ளக்ஸ் விளம்பரங்கள் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாவட்டம் முழுக்க நூற்றுக்கணக்கானோரை திரட்டி சென்னைக்கு அழைத்து வரும் வகையில் பரப்புரை மேற்கொள்வது குறித்தும் திட்டமிடப்பட்டது. கோவை மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாவட்ட பொருளாளர் TMS. அப்பாஸ், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சிங்கை சுலைமான், ஹனிபா, ஜாபர் சாதிக், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அன்சர், பொருளாளர் பைசல், IKP மாவட்ட செயலாளர் மன்சூர், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் ஹாரூன்,
பொருளாளர் நோபல் பாபு, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜுதீன், தொழிற்சங்கம் மாவட்ட பொருளாளர் சமீர், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பாதுஷா மற்றும் பகுதி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை,