இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி:
பொதுவாக இந்தியாவில் ஜூலை 8 அன்று தென்மேற்கு பருவமழை தொடரும். ஆனால் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக சில நாட்கள் முன்பு பருவ மழை பெய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகாவில் கனமழை தீவிரம் அடைந்து உள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் சில பகுதிகளில் ரெட் அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆக.7ம் தேதி வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சிவக்குமார்.