நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 36.50 ரூபாய் குறைக்கப்பட்டு, 2,141 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள், எரிபொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்து வருகிறது.
இந்த நிலையில், சிலிண்டர் விலையில் கடந்த சில தினங்களாக எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது. இதனால் இல்லத்தரசிகள், மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். தற்போது அதிரடியாக, வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 36.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், 2,177.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிலிண்டர், இனி 2,141 ரூபாய்க்கு விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, மே 19 ஆம் தேதியிலிருந்து, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தற்போது 4வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இதே நிலையில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 1068.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சிவக்குமார்.