வருகின்ற 7ம் தேதி புயல் அறிகுறியுடன் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் பருவமழை தீவிரமடையும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
வங்க கடல் மேற்கு மத்திய பகுதியிலும். ஆந்திர கடல் பகுதி அருகிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 4.6 கிலோமீட்டர் உயரத்தில் இந்த மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல் பாக் கராச்சி – குஜராத் அரபிக்கடலிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது சுமார் 4.5 கிலோமீட்டர் உயரத்தில் கடல் மட்டத்தில் இருந்து காணப்படுகிறது. மேலும் ராஜஸ்தான் அருகிலும் இன்னொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது/
இதன் காரணமாக தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று கன முதல் அதிகனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் அதிகனமழை கொட்டி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட், சில மாவட்டங்களில் ரெட் அலர்ட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சிதான் மேலும் மழையின் தீவிரத்தை அதிகப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி வருகின்ற 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உருவாகி புயலாக மாறுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் 60கிமீ இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. உள்மாவட்டங்களிலும் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
நாளைய வரலாறு செய்திக்காக
–ச.கலையரசன் மகுடஞ்சாவடி.