கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூலக்கல் தரைப்பாலம் என்ற பகுதியில் பால் வியாபாரி முத்துக்குமார் பால் விற்பனை செய்த பணத்தை வசூல் செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பொழுது 4 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி அவரை மிரட்டி அவரிடம் இருந்து 5ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இந்நிலையில்
வழிப்பறி திருடர்கள் தப்பி சென்ற இருசக்கர வாகன எண்ணை முத்துக்குமார் குறித்துக்கொண்டு
சூலக்கல் வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் முத்துக்குமார் கூறிய இருசக்கர வாகன எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் வழிப்பறி செய்தது கிணத்துக்கடவு காந்தி நகர் பகுதியை சேர்ந்த இளங்கோவன் (28) அம்பேத்கார் வீதி பகுதியை சேர்ந்த லோகநாதன் (25) என்பது தெரியவந்தது.
இந்த 2 பேரையும் கைது செய்த காவல்துறையினர் மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த வழிப்பறி சம்பவத்தில் கைதான இளங்கோவனின் தந்தை வால்பாறை சரகத்திற்கு உட்பட்ட ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
-M.சுரேஷ்குமார்.