கோவை மாவட்டம் வால்பாறை முத்து முடி 2ஆம் பிரிவு முடீஸ் பகுதியில் மகேஸ்வரி (35) தனது கணவர் இளவரசன் மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும் மகனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மகேஸ்வரிக்கு கடந்த பல நாட்களாக உடல்நிலை சரியா இல்லாத காரணத்தினால் மருத்துவச் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காததால் மன வேதனையில் இருந்துள்ளார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உள்ளார் இதனைக் கண்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூச்சலிட்டு தீயை அணைக்க முற்பட்டனர்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் அவருடைய உயிர் பிரிந்தது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்களும் உறவினர்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.
-M.சுரேஷ்குமார்.