தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சென்னம்பட்டி கிராமத்தின் விவசாய நிலத்தில் மூர்த்தி என்பவர் ஆட்டுக்கிடையில் 10 ஆடுகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் புதுக்காலனியில் குடியிருந்து வருபவர் மூர்த்தி. இவர் 400 செம்மறி ஆடுகளை வைத்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். மேலும் விவசாய நிலங்களில் ஆட்டுக்கிடை போடுவது வழக்கம். தற்போது மூர்த்தி தனது ஆடுகளை வைத்து சென்னம்பட்டி கிராமத்தில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஆட்டுக்கிடை போட்டுள்ளார். கடந்த 3ந்தேதி இரவில் மூர்த்தி தனது ஆட்டுக்கிடையில் ஆடுகளை அடைத்து விட்டு அவரும், அவரது சித்தப்பா பாலமுருகன் இருவரும் புதூரில் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு ஆட்டுக்கிடைக்கு திரும்பி வந்து தூங்கியுள்ளனர். காலையில் எழுந்து பார்க்கும் போது 2 ஆடுகளின் கால்கள் கட்டப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த மூர்த்தி ஆடுகளை எண்ணி பார்த்த போது 10 ஆடுகள் காணமால் போய் இருப்பது தெரியவந்தது.
அதன் மதிப்பு ஒரு லட்சம் என்று கூறப்படுகிறது. இதையெடுத்து மூர்த்தி புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்திய போது, சில நாள்களாக 3 நபர்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு சென்றதாக லோடு ஆட்டோ டிரைவர்கள் கூறினார். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை தொடங்கினார். விசாரணையில் சுப்புலாபுரத்தினை சேர்ந்த விஜய், குளக்கட்டான்குறிச்சியை சேர்நத முத்து, புதூர் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமார் என்பது தெரியவந்தது. இதையெடுத்து 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆடுகளை திருடியது தெரியவந்து, இதையெடுத்து போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– முனியசாமி ஓட்டப்பிடாரம்.