தூத்துக்குடி சிப்காட் அலகு 2-வது பிரிவில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை கோரி வழக்கு சிப்காட் தலைவர் பதில் அளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் 2018 தமிழ் நாடு அரசின் கட்டுப்பாட்டில் மூடப்பட்டு உள்ளது. இது தூத்துக்குடி சிப்காட் முதல் பகுதியில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டில் சிப்காட்டில் 2-ம் பிரிவு அமைக்க, மாநில சிப்காட் நிறுவனம் முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்களின் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டமே ரத்து செய்யப்பட்டது.
ஆனால் சிப்காட் பிரிவு அலகு 2-ன் எல்லைக்குள் உள்ள 131.33 எக்டேர் நிலத்தில் தனது யூனிட்டை அமைக்க ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கவில்லை. ஆனால் இந்த தகவல்களை மறைத்து தமிழக சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி பெற்று உள்ளனர். இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சிப்காட் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு குறித்து சிப்காட் அமைப்பின் தலைவர், மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம் .