தூத்துக்குடி மாவட்டம் பத்மநாபமங்கலம் பகுதியில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடி எடுத்து வந்தது தெரியவந்தது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து காவல் ஆய்வாளர் அன்னராஜ் வழக்குபதிவு செய்து டிராக்டரின் ஓட்டுநரான பேட்மா நகரம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து மகன் பலவேசம் (42) என்பவரை கைது செய்து, 1 யூனிட் ஆற்று மணல் மற்றும் மணல் திருடுவதற்கு பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.