டிக்டாக்கில் பிரபலமாவது பற்றி சொல்லி தருகிறேன் என ஏமாற்றி கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த, கேரளாவை சேர்ந்த டிக்டாக் பிரபலத்தை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கேரளாவில் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர், பிரபல டிக் டாக் நடிகர் வினீத். இவர், டிக் டாக் என்ற செயலி மூலம் பல வீடியோக்களை பதிவிட்டு புகழ் பெற்ற நபராக திகழ்ந்து வருகிறார். இவர் போடும் வீடியோக்களுக்கு கொஞ்ச நேரத்திலேயே லைக்குகள் எகிரி, அந்த வீடியோ வைரல் ஆகி விடும்.
இந்த நிலையில் இந்த செயலி வாயிலாக, கொல்லம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் வினித் நெருக்கமாக பழகியுள்ளார். இந்த டிக் டாக் செயலியில், பிரபலம் ஆவது எப்படி என்று சொல்லித் தருகிறேன் என ஏமாற்றி அழைத்துச் சென்று லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, மாணவி போலீசில் புகார் செய்தார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தன்னைப் போலவே பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர் மொபைலில் உள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் இவர் ஏமாற்றி இருக்கலாம் என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டார். மாணவியின் இந்த புகாரை அடுத்து போலீசார் வினீத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சிவக்குமார்.