1888, செப்டம்பர் 5 ஆம் நாள் பிறந்த சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியும், ஆசிரியருமான சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளே ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கருவிலே கற்றுத்தரும் அன்னையாய்
கரம்பிடித்து வழிநடத்தும் தந்தையாய்
மாணவர் அகஇருள் நீக்கி
அறிவொளி ஏற்றி ஆளாக்கி, அவர்களுக்கு
உலகை உணர்த்திய ஆசிரியப் பெருமக்களின் பணி வார்த்தைகளில் அடங்காத அறப்பணியாகும்.
மாணவர்கள் ஞானம் பெற நாள் தோறும்
தாமே மாணவராய் மாறி
கற்றுத் தெளிந்து கற்பித்து
தன்னிலும் உயரிய நிலையடையும்
தம் மாணவர்களைக் கண்டு
பெருமிதம் கொள்ளும் நல்லாசிரியப் பெருமக்களை நாமும் நன்றியுடன்
வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!
நல்வாழ்த்துடன்,
-சோலை. ஜெய்க்குமார் / Ln. இந்திராதேவி முருகேசன்.