கோவை அவிநாசி சாலை தொட்டிபாளையம் பிரிவு அருகே பீளமேடு போலீசார், நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு காரில் 10 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இருகூரை சேர்ந்த கங்காபிரசாத், 26, என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கார், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பதை, தொழிலாக செய்து வந்துள்ளார்.
அவர் பீளமேடு நேரு நகரில் வீடு வாடகைக்கு எடுத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் வீட்டை சோதனையிட்டபோது, 84 கிலோ கஞ்சா இருந்தது.கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வீட்டில் இருந்த வைஷ்ணவி,20 என்ற பெண்ணையும் கைது செய்தனர்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.