கோவையில் நேற்று தொடர்ந்து பெய்த கனமழையால், சாலைகள் குளமாக மாறின. வாகனங்கள் தத்தளித்தன. பள்ளி, கல்லுாரி முடிந்து வீடு திரும்ப முடியாமல் மாணவ மாணவியர் மற்றும் அலுவலக ஊழியர்கள் தவித்தனர்.
கோவை நகரில் கடந்த மூன்று நாட்களும், தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. பெய்யும் மழை நீர் வடிந்து செல்ல, போதுமான வடிகால்கள் இல்லாததால் சாலைகளில் தேக்கமடைந்து, வாகன ஓட்டிகளை கடும் சிரமத்துக் குள்ளாக்கியது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்று மட்டும் கோவையில் சராசரியாக, 17.89 மி.மீ., மழை பெய்தது. அரசு மருத்துவமனை, லங்கா கார்னர், ரயில்வே ஸ்டேஷன், அவிநாசி சாலை மேம்பாலம், காளீஸ்வரா மில் பாலம், கிருஷ்ணசாமி முதலியார் சாலை ரயில்வே பாலம், வடகோவை மேம்பாலம் ஆகிய பகுதிகளில், மழை நீர் ஆள் உயரத்திற்கு தேங்கி நின்றது. வாகனங்கள் அவ்வழியே செல்ல முடியவில்லை.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் குடும்ப திருமண விழா அவிநாசி சாலை கொடிசியா அரங்கில் நடந்தது. அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றதால் அவிநாசி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் மழையும் சேர்ந்து கொள்ள, வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தைக் குள்ளாயினர்.
சிவானந்தா காலனி ரயில்வே பாலத்தில், மழைநீர் இடுப்பளவு தேங்கி நின்றது. அவ்வழியே சென்ற கல்லுாரி வாகனம், மழைநீரில் சிக்கியது. இதையடுத்து, அவ்வழியே வாகன போக்குவரத்துக்கு இரும்பு பேரி கார்டுகளை வைத்து தடை ஏற்படுத்தப்பட்டது. மேட்டுப்பாளையம் சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.