இருதய நலனில் அக்கறை செலுத்த ஆரோக்கிய உணவு அவசியம் என்பதை வலியுறுத்தி கோவையில் பி.பி.ஜி.மனையியல் அறிவியல் கல்லூரி மற்றும் அஸ்வின் மருத்துமனை சார்பாக மாணவ, மாணவிகள் நடத்திய விழிப்புணர்வு நாடகம் மற்றும் பேரணி நடைபெற்றது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இருதய நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்டம்பர் 29 ஆம் தேதி உலக இருதய தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பி.பி.ஜி.நர்சிங் மற்றும் மனையியல் அறிவியல் கல்லூரி , அஸ்வின் மருத்துமனை சார்பாக,சரவணம்பட்டி காவல் நிலையம் முன்பாக கல்லூரி மாணவ,மாணவிகள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நாடகம் மற்றும் பேரணி நடைபெற்றது.
இதில் இருதய நோய் வராமல் தடுக்க காய்கறி கீரை வகை போன்ற ஆரோக்கிய உணவு வகைகளை உட்கொள்வது,உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பேரணியை பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் அவருடன் பி.பி.ஜி.கல்வி குழும தாளாளர் சாந்தி தங்கவேலு, சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் செல்லமணி, ஆகியோர் உடனிருந்தனர். பேரணியில் , தினமும் உடற்பயிற்சி செய்வது, இருதய பாதுகாப்புக்கு ஏற்ற அனைத்து பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்,
நேரத்துக்கு சிறந்த உணவை எடுக்க வேண்டும், உடலுக்கு கேடு விளைவிக்கும் புகை பழக்கம், மது அருந்துவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள. அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்த படி சென்றனர்.
– சீனி, போத்தனூர்.