கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த இஞ்சிப்பாறை லோயர் டிவிஷனில் குடியிருந்து வரும் தங்கம் என்பவரை இஞ்சிப்பாறை பேருந்து நிலையம் அருகே நேற்று சரியாக 8.50 மணியளவில் கரடி தாக்கியதால் ரத்த வெள்ளத்தில் கதறியபடி ஓடி வந்த நபரை அந்த வழியாக ஆட்டோவில் வந்த நபர்கள் கண்டு உடனடியாக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இச்சம்பவம் குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் முருகனை கரடி தாக்கியதற்கு முக்கியமான காரணம் 15 ஆம் வார்டில் தெரு விளக்குகள் ஒன்று கூட கிடையாது. இதை நகராட்சி நிர்வாகம் உடனடியாக கண்காணித்து அனைத்துப் பகுதிகளிலும் மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும் மேலும் எஸ்டேட் பகுதியில் இருக்கக்கூடிய புதர்களை அகற்ற வேண்டும் குடியிருப்பு பகுதிகளில் சுத்தம் செய்ய வேண்டும் வனவிலங்குகளை கண்டறிந்து வனத்துறையினர் அதை பிடித்து வேறு இடங்களுக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை
இருந்து வருகிறது.
இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காத படி வனத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.