காருண்யா நிகழ்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பால் தினகரன் அறுபதாவது பிறந்த நாள் விழா நிகழ்வாக மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கூடைப்பந்து, ஆண்கள் மற்றும் பெண்கள் பாரா வாலிபால், ஆண்கள் விளையாட்டு போட்டிகள் கடந்த 15ஆம் தேதி தொடங்கி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
இந்த வீல் சேர் கூடைப்பந்து போட்டியில் சென்னை, கோவை, வேலூர், புதுச்சேரி ஆகிய அணிகளும் பாரா வாலிபால் போட்டியில் கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காருண்யா பேராசிரியர்களும் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். இந்த விளையாட்டுப் போட்டியின் மூலம் தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியும் புதுப்பித்துக் கொண்டனர்.
நிறைவு விழாவில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காருண்யா நிகழ்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன் முன்னிலையில் வெற்றி பெற்ற அணியினரை வாழ்த்தி வெற்றி கோப்பைகள் பரிசுகளை வழங்கினார்.
-சீனி, போத்தனூர்.