75 வருட சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக கோவை குமரகுறு கல்லூரியில் “தி ஆர்ப்” தற்காலத்திற்கேற்ற உத்வேகத்துடன் உருவாக்கப்பட்ட இடத்தில் 115 அடி உயர கொடிக் கம்பத்துடன் கூடிய வட்ட வடிவிலான மேடையும், அகண்ட திறந்தவெளி அரங்கத்தையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இவ்விடம், பல நிகழ்வுகளாலும், ஆக்கபூர்வமான செயல்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி அரங்கை திறந்து வைத்து உரையாற்றினார். பரம்வீர் சக்ரா விருது பெற்ற இளையவரான சுபேதார் மேஜரும் கவுரவ கேப்டனுமான யோகேந்திர சிங் யாதவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை வழங்கினார். தி ஆர்பில் சுதந்திர உணர்வை தூண்டும் மூவர்னக் கொடி 24 மணி நேரமும் பறந்து தேசிய பெருமையை காத்து நிற்கிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குமரகுரு நிறுவனங்கள், சுதந்திரம், ஒற்றுமை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டாடும் ஒரு எழில் மிகு அரங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘தி ஆர்ப்’ என்ற நினைவாளயத்தை உருவாக்கி நமது 75வது சுதந்திர ஆண்டை கொண்டாடியது.
நிறுவனர் அருட்செல்வர் டாக்டர் நா மகாலிங்கம் அய்யாவின் நூற்றாண்டு விழாவில் ‘தி ஆர்ப்’ என்ற அரங்கத்தை திறந்து வைத்து, நாட்டின் இளைய சமூகத்தின் மேன்மைக்காகவும் உயர்வுக்காகவும் செயல்படுவோம் என்ற நோக்குடன் பயணத்தை தொடங்கியது.
இந்த சமகால இடத்தை தேசிய மாணவர் படை, தங்கள் பயிற்சிக்காக பயன்படுத்துவார்கள். திறந்தவெளி அரங்கில் திரைப்படங்கள், கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறும் ,கலை மற்றும் வடிவமைப்பு கண்காட்சிகளை இவ்வரங்கின் சிறப்பம்சங்களாக அமைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் கலந்து கொண்ட இதில் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியின் இணை தாளாளர் சங்கர் வாணவராயர் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், தாளாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்த இதில் கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
– சீனி, போத்தனூர்.