கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள மறையூர் பகுதியில் உள்ள மறையூர் காலனியில் கடந்த சில வாரங்களாகவே திருட்டுக்கள் அதிகரித்து கொண்டே வருகின்றது.இந்த நிலையில் மறையூர் காலனியில் வசித்து வரும் சரோஜா என்பவர் ஓணத்தை முன்னிட்டு ஒருவாரம் மூணாறில் உள்ள மாங்குளம் பகுதியில் உள்ள வீட்டிற்கு ஓணத்தை சிறப்பிக்க சென்று பின்னர் கடந்த ஞாயற்றுக்கிழமை அன்று மறையூரில் உள்ள வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டை திறந்து பார்த்த போது அலமாரி திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சரோஜா மட்டுமே வசித்து வரும் வீட்டில் திருடர்கள் புகுந்து தேடி பார்த்தும் ஒன்றும் சிக்கவில்லை.மிகவும் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். இந்த தொடர் திருட்டு நடக்காமல் இருக்க காவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.