கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட தென் சங்கம்பாளையம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் செப்டம்பர் 14ஆம் தேதி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கினார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொள்ளாச்சி சப் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் முன்னிலை வகித்தார் மேலும் நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மேலும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முதியோர் உதவித்தொகை, பட்டா மற்றும் காலிமனை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கை மனுக்கள்வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன் அவர்கள் பட்டா, தையல் மெஷின், இஸ்திரி பெட்டி என்பன போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்
அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் குறைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அனைத்து மாவட்ட அரசு துறைகள் குழுவாக சென்று மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதோடு இதர அரசு சேவைகளையும் வழங்கப்பட்டு வருவது இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.