சர் மோச்ச குண்டம் விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாள் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கோயமுத்தூர் மாவட்ட அனைத்து கட்டிடப் பொறியாளர்கள் சங்கம் (CODCEA). சார்பாக, பொறியாளர் தின விழா, பொறியாளர் தின விருதுகள், மற்றும் e-Civil வெளியீடு என முப்பெரும் விழாவாக கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
காட்சியாவின் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற, விழாவில் சர் மோச்ச குண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, விஸ்வநாதன் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத் தலைவர் விஸ்வநாதனுக்கு, “Eminent Engineer” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவில், சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் சந்திரகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். விழாவின் ஒரு பகுதியாக, பொறியாளர்களையும் வர்த்தகர்களையும் இணைக்கும் வகையில் புதிய வடிவிலான இணைய வழி விளம்பர திட்டம் இ.சிவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் சங்கப் பொறியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதும், கடந்த ஆண்டு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற பொறியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும், சிறந்த பொறியாளர்களுக்கான விருது Er. விஜயகுமார்
Er. ஜமுனா Er. ஸ்ரீதர் ஆகியோருக்கும், சிறந்த கட்டிடக் கலைஞர் விருது திரு.முருகேஷ் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. சங்கத்தின் செயலாளர் Er. V. ரவிச்சந்திரன் செயலாளர் அறிக்கை சமர்ப்பித்தார். துணை தலைவர் Er.R. ரமேஷ் குமார் அவர்கள் e-Civil திட்டங்களை பற்றி விளக்கி கூறினார்.
இக்கூட்டத்தில் இணைசெயலாளர் ராமலிங்கம் துணை பொருளாளர் ரவிக்குமார் அலுவலக நிர்வாகி ஜெகதீஸ்வரன் பிஆர்ஓ மணிகண்டன். A.PRO லட்சுமி நாராயணன் உட்பட காட்சியாவின் கோர் கமிட்டி, செயற்குழு உறுப்பினர்கள் ,பொதுக்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.