கோவை மாவட்டம் போத்தனூர் வெள்ளலூர் சாலையில் ஜிடி வெய்லர் அருகில் அமைந்துள்ள முல்லை நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.
இங்கு விநாயகர் சதுர்த்தியில் 20-ம் ஆம் ஆண்டு பிரமாண்ட விநாயகர் உருவ சிலை வைக்கப்பட்டு,
மூன்று நாட்கள் விநாயகர் சிலை பூஜிக்கப்பட்ட அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நேற்று பிரமாண்ட அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் ஊர்வலத்தில் ஆடி மகிழ்த்தனர்.
ஊர்வலத்தில் விநாயகரை போன்று வேடமணிந்து வந்தவரை அனைவரும்
புகைப்படம் எடுத்து மகிழ்ந்து கொண்டாடினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.