கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 25-வது வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தின் நினைவாக தொழில்துறை மற்றும் கல்வித்துறையை இணைக்கும் வகையில் தொழில்துறை 5.O பற்றிய ஒரு நாள் மாநாடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி 25-வது வெள்ளி விழா லோகோ அறிமுகப்படுத்தினார். இதில் பெங்களூரு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அகாடமிக் இன்டர்ஃபேஸ் புரோகிராம் (ஏஐபி) பொது மேலாளர் மற்றும் தலைவர் சந்திரா கொடூரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் இவர் பேசியபோது தொழில் நிறுவனங்களில் புதிய புரட்சி வரவுள்ளது. இது பைவ் பாயிண்ட் வோ (5.O) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்துறை 5.O தொழில்துறை மற்றும் பல துறைகளில் பல பரிமாணங்களைக் கொண்டுவரப் போகிறது.
உலகம் தற்போது அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. நாம் இப்போது ஒரு மேம்பட்ட உலகில் வாழ்கிறோம். இதனால் தொழில்நுட்பம் மக்களை ஒரே இடத்தில் அமர்ந்து சிந்திக்க வைத்தது. அனைத்து தொழில் புரட்சிகள் மனிதர்களை இயந்திரங்கள் பயன்பாட்டினால் மாற்றுகின்றன. ஆனால் புதிய தொழில்துறை புரட்சி இயந்திரம் மற்றும் மனிதர்கள் ஆகிய இருவருடனும் இணைந்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜிங்கா நிறுவனம் முதுநிலை மேலாளர் கார்த்திக் சந்திரசேகர்,
ஜீ. எம்.ஆர் நிறுவன வளர்ச்சி & டேலண்ட் மேனேஜ்மென்ட் ஸ்பெஷலிஸ்ட், கண்ணன் மனோகரன், மற்றும் என்,ஐ.சி மூத்த தொழில்நுட்ப இயக்குனர் & கூடுதல், மாநில தகவல் அதிகாரி கோபி சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
வெள்ளிவிழா லோகோ அறிமுக விழாவில் முதன்மை நிர்வாக அதிகாரி கே.சுந்தரராமன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெகஜீவன் வரவேற்றார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் விஜயசாமுண்டீஸ்வரி, பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், தொழில் துறை நிர்வாகிகள், மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வணிகவியல் துறையின் தொழில் நிறுவன ஒருங்கிணைப்பு பிரிவின் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
– சீனி, போத்தனூர்.