கிருங்காக்கோட்டை திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த மச்சக்காளை என்பவரது மகன் ஜெகதீஸ்வரன்(30), சில தினங்களுக்கு முன்பு தனது சகோதரி உமாதேவியுடன்(32) சிங்கம்புணரி பெரியாறு கால்வாய் அருகே உள்ள தங்களது புதிய வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அப்போது அந்த வழியே குடிபோதையில் வந்த நான்கு இளைஞர்கள் ஜெகதீஸ்வரன் மற்றும் உமாதேவி இருவரையும் ஆபாசமாகப் பேசியுள்ளனர். அதைத் தட்டிக் கேட்ட ஜெகதீஸ்வரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஜெகதீஸ்வரன் மற்றும் உமாதேவி இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
படுகாயமடைந்த இருவரும் சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து ஜெகதீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் குகன் தலைமையிலான சிங்கம்புணரி காவல்துறையினர் தீவிர விசாரணை செய்ததில், ஜெகதீஸ்வரனுடன் குடிபோதையில் ஆபாசமாக வாக்குவாதம் செய்து, அவர்களை தாக்கிய நால்வர் சிங்கம்புணரியைச் சேர்ந்த கணேசன் மகன் அன்பரசன்(23), முருகேசன் மகன் கார்த்தி செல்வம்(19), மற்றொரு கணேசன் மகன் சரவணன்(19) ஆகியோருடன் பெயர் குறிப்பிடப்படாத இவர்களது மற்றொரு நண்பர் எனத் தெரியவந்தது.
உடனடியாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சிங்கம்புணரி காவல்துறையினர் அன்பரசன், கார்த்தி செல்வம், சரவணன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தலைமறைவாகியுள்ள அவர்களது மற்றொரு நண்பரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.