ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2ஆம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, உலகிலேயே அதிகளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் ஆசியாவில் இந்த தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தேங்காயின் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் தேங்காயின் பன்முகத்தன்மையை கொண்டாடும் விதமாகவும் உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கம், இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில், 1969ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி துவங்கப்பட்டது. இதை முன்னிட்டு, ஆண்டுதோறும் அந்தத் தேதியில், உலக தேங்காய் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், தேங்காயில் இருக்கும் நன்மைகள், தென்னை சாகுபடியில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் குறித்து, கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.
சிங்கம்புணரி அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டி கிராமத்தில் உலக தென்னை தினத்தை முன்னிட்டு சேர்வைக்காரன்பட்டி தென்னை விவசாயிகளிடம் கூட்டம் நடத்தப்பட்டது. சிவகங்கை வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன் தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் செந்தூர் குமரன்,
சிங்கம்புணரி வேளாண்மை உதவி இயக்குநர் அம்சவேணி, துணை மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் (வணிகம்) மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிலைய சேர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தென்னை சாகுபடியில் உர நிர்வாகம், ‘ரூகோஸ் ஈ’யைக் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை கண்காட்சி மூலமாகவும், செயல்முறை மூலமாகவும் விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. உலக தென்னை தின விழா கூட்டத்தினை அட்மா திட்ட பணியாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.