சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்குத் தேவையான வெவ்வேறு வகையான ரத்தம் பல்வேறு ரத்ததான முகாம்கள் மூலம் சேகரிக்கப்படுவது வழக்கம்.
அதுபோன்ற ஒரு ரத்ததான முகாமை நேற்று முன்தினம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலம் கிராமத்தில் உள்ள மகாராஜா பல்நோக்கு தொழில் நுட்பக் கல்லூரியில், சிவகங்கை மருத்துவ கல்லூரி ரத்த வங்கி குழுவினர் மற்றும் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து நடத்தினர்.
வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமையில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமிற்கு கல்லூரி முதல்வர் பிரேம்நாத் முன்னிலை வகிதார்.
இந்த முகாமில் கல்லூரி மாணவர்களிடம் அரிய வகை ரத்தம் உள்பட 40 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.
சிவகங்கை ரத்த வங்கி மருத்துவர்கள் வசந்த் மற்றும் சூர்யா, சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆதித்யா மற்றும் எஸ்.வி.மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர். கலைச்செல்வி சீனிவாசன், சுகாதார ஆய்வாளர்கள் எழில்மாறன் மற்றும் ருத்ரசேனா, ICTC ஆலோசகர் தங்ககுமார், கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.