திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் சர்க்கார்கண்ணாடிபுத்தூர் கிராமம் உட்கடை நீலம்பூர் அமராவதி ஆற்றில் இன்று 3-9-2022 ஆம் தேதி 11:45 மணியளவில் நீலம்பூர் கிராமம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் முடிந்ததை முன்னிட்டு தீர்த்தம் எடுத்துச் சென்று கோவிலில் சிறப்பு யாக பூஜை நடத்துவதற்காக 80 நபர்கள் சென்றிருந்தபோது அங்கு மரத்திலிருந்த தேனீ குளவிகள் களைந்து 45 நபர்களை கொத்தி விட்டது.
இதனால் மேற்படி தேனீ குளவி கடித்தவர்கள் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்துள்ளனர்.
மேலும் விசாரணை செய்து விரிவான அறிக்கையினை பின்னர் சமர்ப்பிப்பதாக மடத்துக்குளம் மண்டல துணை வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
-துல்கர்னி, உடுமலை.