தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, இணைந்து கோவை மத்திய மாவட்ட, செல்வபுரம் வடக்கு கிளை சார்பாக, முப்பெரும் விழா நிகழ்ச்சியின் துவக்கவிழா நடைபெற்றது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, இணைந்து கோவை மத்திய மாவட்ட செல்வபுரம் வடக்கு கிளை சார்பாக இன்று முப்பெரும் விழா நிகழ்ச்சியின் துவக்க விழாவாக உள்ளூர் விளையாட்டு போட்டிகளை ஊக்கபடுத்தும் வகையில் ஃபோர் லைன் எனும் கிரிக்கெட் போட்டி கோவை செல்வபுரம் பகுதியில் இன்று நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச இரத்த வகை கன்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று மாலை செயல் வீரர்கள் கூட்டம் நடை பெற உள்ளது. இவ்வாறான முப்பெரும் விழாவினை முன்னிட்டு ஃபோர் லைன் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியினை நசீர் தலைமை தாங்கினார. கிரிக்கெட் போட்டியினை கோவை மாநகராட்சி 86வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஹமது கபிர் துவக்கி வைத்தார். ரத்த வகை கன்டறியும் முகாமை தமுமுக கிளை செயலாளர் அப்பாஸ் துவக்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், நிகழ்ச்சி ஒருங்கினைப்பு குழு தலைவர் ராஜா, மமக செயளாளர், செமீர், பறக்கும் படை சுபேர், உஷ்மான், தமுமுக துணை செயலாளர், உமர் பைசல், பாபு, நியாஸ் மன்சூர், நிஷார், ஷாகுல், என பலரும் கலந்து கொண்டனர் என்பது, குறிப்பிடதக்கது.
– சீனி, போத்தனூர்.