ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கூடுமஸ்தான் வளி தர்கா சமாதி அசைவதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஜம்மலமடுகு அருகே பென்னா நதிக்கரையில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான தர்காவில் குடுமஸ்தான் வளி சமாதி உள்ளது. தினமும் அங்கு ஏராளமான அளவில் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று இரவு அன்னதானம் நடைபெறும்.
இந்த நிலையில் நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் அங்கு வந்து வழிபாடு நடத்தி உணவு அருந்தி சென்றனர். அப்போது சமாதியின் ஒரு பகுதி அசைவதாக கருதிய பக்தர்கள் அதனை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதனால் ஏராளமான பக்தர்கள் அங்கு இரவு முழுவதும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.