திருப்பத்தூர் தலைமை ஆசிரியை கொடூரக்கொலை! தம்பியின் மனைவி கள்ளக்காதலனுடன் கைது!!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கான்பாநகர் பகுதியில் கணவர் உயிரிழந்த நிலையில் சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தவர்வந்தவர், ரஞ்சிதம்(52). இவர் தென்மாபட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 7ஆம் தேதி புதன்கிழமை தனது வீட்டில் கால் நரம்பு, கை நரம்புகள் அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களையும், மோப்ப நாயையும் வரவழைத்து தீவிர விசாரணையைத் துவக்கினர். தடயங்கள் ஏதும் கிடைக்காத நிலையில், கொலைக்குற்றவாளியை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறினர்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக ரஞ்சிதத்தின் உறவினர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தலைமை ஆசிரியை ரஞ்சிதத்தின் அக்கா மகளும், அவரது உடன்பிறந்த தம்பி பாண்டிவேல் முருகனின் மனைவியுமான நதியா (32) மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

திருப்பத்தூருக்கு அருகிலுள்ள நெடுமரத்தில் வசித்து வந்த நதியா, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்கு முன்னரே வந்திருக்கிறார். அதன் காரணமாகவும் காவல்துறையினரின் சந்தேக வளையத்தில் இருந்த அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, கொலை செய்யப்பட்ட ரஞ்சிதம், தனது அக்கா மகள் நதியாவை, தனது தம்பி பாண்டிவேல் முருகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். நதியாவிற்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் பாண்டிவேல் முருகன், மனைவி நதியாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், தனது அக்கா ரஞ்சிதத்திற்கு பணம் அனுப்பி, வீட்டுச்செலவுக்கு மட்டும் மனைவி நதியாவிடம் பணம் கொடுக்கும்படி சொல்லியுள்ளார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதனால் தனது சித்தி ரஞ்சிதம் மீது நதியாவுக்கு கோபம் இருந்துள்ளது. இந்நிலையில் நதியாவின் எதிர் வீட்டில் வசிக்கும் திருமணமாகாத சூர்யா (25) என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டு, பின்பு அது கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்தபோது நதியா தனது கள்ளக்காதலன் சூர்யாவிடம், சித்தி ரஞ்சிதம் எனது கணவன் அனுப்பும் பணத்தை வைத்துக் கொண்டு, எனக்குத் தராமல் என்னை கடன்காரியாக அலைய விடுகிறாள்.

அவள் உயிரோடு இருக்கும்வரை நான் நிம்மதியாக வாழ முடியாது எனக் கூற, சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். 12ஆம் வகுப்பு வரை படித்த சூர்யா, கொலை செய்தால் எப்படித் தப்பிக்கலாம்? சி.சி.டி.வி கேமரா ஹார்டு டிஸ்க்கை எப்படிக் கழட்டுவது? எனத் தெரிந்து கொள்வதற்காக அது சம்பந்தப்பட்ட காணொளிகளை யூடியூப்பில் கடந்த ஒரு மாதமாகப் பார்த்துப் பயின்றுள்ளார். மேலும், தடயங்கள் சிக்காதவகையிலும் சந்தேகம் வராத வகையிலும் கொலை செய்து கொள்ளையடிப்பதற்காக கடந்த ஒரு மாதமாக திட்டம் போட்டு காத்திருந்திருக்கிறார்.

இதனிடையே, கடந்த 6ஆம் தேதி செவ்வாய்கிழமை நதியாவின் கணவன் ₹1.50 லட்சம் பணம் அனுப்பியுள்ளது தெரியவந்தது. எனவே, அன்று இரவு 9:30 மணி அளவில் தலைமை ஆசிரியரின் வீட்டின் பின்புற சுவர் ஏறிக்குதித்த சூர்யா, அங்கு மறைந்திருந்தார். தூங்குவதற்கு முன்பாக ரஞ்சிதம் வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறை சென்று விட்டு வீட்டுக்கு செல்லும்போது பின் தொடர்ந்த சூர்யா, கையுறை மாட்டிக்கொண்டு தலைமை ஆசிரியர் ரஞ்சிதத்தின் மூக்கையும் வாயையும் பொத்தி, இடதுகையால் கழுத்தை நெறித்து கீழே தள்ளியுள்ளார்.

இதில் தலைமை ஆசிரியர் ரஞ்சிதம் மயங்கிக் கிடந்த நிலையில் பீரோவில் இருந்த சுமார் 60 பவுன் நகைகள் மற்றும் சுமார் ₹2.50 லட்சம் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்ப முயன்ற போது மயக்கம் தெளிந்த ரஞ்சிதம் முனங்கிய சத்தம் கேட்டதால், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து யூடியூபில் பார்த்தவாறு ரஞ்சிதத்தின் வலது கை நரம்பை அறுத்துள்ளார். அப்போதும் உயிர் பிரியாததால், தொடர்ந்து கால் நரம்பையும் அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு, சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கையும் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். கொள்ளையடித்த நகை, பணத்தை கள்ளக்காதலி நதியாவிடம் கொடுத்து விட்டு எதுவும் நடக்காதது போல தனது வீட்டிற்குச் சென்று விட்டார்.

சித்தியின் கொலையில் தன்மீது சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அடுத்த நாள் காலை காவல்துறையினர் அங்கு வருவதற்கு முன்னதாகவே நதியா சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்திருக்கிறார். எனவே, திருப்பத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி நதியாவின் மீது சந்தேகப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அடுத்தடுத்து வருகை தந்ததால், அப்போது தப்பித்து கொண்ட நதியா எதுவும் தெரியாதது போல துக்க நிகழ்வில் அழுது கொண்டு நடித்தார். மேலும், அவரது கள்ளகாதலன் சூர்யாவும் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட 3 தனிப்படைகளின் கிடுக்குப்பிடி விசாரணையில் சிக்கிய நதியா, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களிடமிருந்து சுமார் 60 பவுன் நகைகள், ₹2.20 லட்சம் ரொக்கம், இரண்டு செல்போன்கள், சிசிடிவி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

-பாரூக், சிவகங்கை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp