2019 ஆம் ஆண்டில் பிகில் திரைப்படம் வெளியானது இத் திரைப்படத்தை காண குடும்பத்துடன் வந்த செல்வ விநாயகம் என்பவரை திரைப்படம் காண திரையரங்கில் அனுமதிக்கப்படவில்லை.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காரணம் மது போதையில் வந்திருப்பதாக திரையரங்கில் பணிபுரியும் நபர்கள் கூறியதால் செல்வ விநாயகம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் திரையரங்கு வரும் முன்னே படத்திற்கு முன் பதிவு செய்துள்ளதாகவும் நான் போதை பொருள் எதையும் உபயோகிக்கவில்லை என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஆனாலும் திரையரங்கில் அவரை அனுமதிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அவர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் தற்போது திருப்பூரில் பிரபலமான ஸ்ரீ சக்தி தியேட்டர் திரையரங்குக்கு ரூ 10,200 நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்தது. ஸ்ரீ சக்தி தியேட்டரின் உரிமையாளர் அவர்கள் ஒரு நன்மதிப்பை பெற்ற நபர் மற்றும் திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் வைப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா.