தூத்துக்குடி துறைமுகம் – மீளவிட்டான் ரயில் நிலையங்கள் இடையே, இன்று அதிகாலையில் துறைமுகத்திலிருந்து நெல்லைக்கு புறப்பட்டு சென்ற லைட் எஞ்சின் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து ரயில்வே போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்து உயிருக்கு பேராடிய அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9 மணிக்கு உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி சக்தி நகர் 3வது தெருவைச் சேர்ந்த நாகேந்திரன் மகன் வேல்முருகன் (23) எனத் தெரியவந்ததது. தீராத நோயால் அவதிப்பட்டு வந்த அவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மகா கிருஷ்ணன் விசாரித்து வருகிறார். ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த வேல் முருகன் மீது தூத்துக்குடி மத்திய பாகம், தென்பாகம், சிப்காட், முத்தையாபுரம் காவல் நிலையங்களில் 10கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.