தூத்துக்குடி மாவட்டத்தில் 8 உரக்கடைகள் விதி மீறல்கள் – உரிமம் ரத்து!

    தூத்துக்குடி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 8 உரக்கடைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூா் ஆகிய வட்டாரங்களில் ராபி பருவ மானாவாரி பயிா்களான மக்காச்சோளம், பயறுவகைகள், எண்ணை வித்துக்கள், பருத்தி ஆகியவை சுமாா் 1.60 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.

இதற்கான உர விநியோகம் தொடங்கியுள்ள நிலையில் வேளாண்- வருவாய்த் துறை அலுவலா்களை கொண்ட குழு மாவட்டத்தில் அனைத்து வட்டார உரக்கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டது. அதில், விதிகளை மீறி செயல்பட்டதாக 8 உரக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அதன் விற்பனை முனையக் கருவிகள் (பிஓஎஸ்) வேளாண்மை இயக்குநரகத்தால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

உரங்களை அதிக விலைக்கு விற்றல், இணைப் பொருள்களை வாங்க கட்டாயப்படுத்துதல், வெளிமாவட்டங்களிலிருந்து போலி உரங்களை விற்றல் போன்றவை குறித்து கயத்தாறு (9080767716), கோவில்பட்டி (7092193209), ஓட்டப்பிடாரம் (9786301904), விளாத்திகுளம் (7708575642), புதூா் (8300159451), தூத்துக்குடி (8056764148), செய்துங்கநல்லூா் (9566334247), திருவைகுண்டம் (9894987290), ஆழ்வாா்திருநகரி (9629582564), திருச்செந்தூா், உடன்குடி (9003896396), சாத்தான்குளம் (9159041865),

வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம், தூத்துக்குடி (0461-2340678), வேளாண்மை உதவி இயக்குநா் தரக்கட்டுப்பாடு, தூத்துக்குடி (9655429829) ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் குறியது உரங்கள் விலை முட்டைகளில் உள்ள விலைக்கு வாங்க வேண்டிய நிலையில் உள்ளது அதை மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

முனியசாமி ஓட்டப்பிடாரம் .

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp