ஓட்டப்பிடாரம் அருகே தமிழ்நாடு பட்டியல் இன பாதுகாப்பு பேரவையினர் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை சார்பில் குறுக்குச்சாலை பஸ்நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழகத்தில் உள்ள 12.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் இன மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு கக்கன் பெயர் சூட்ட வேண்டும். குறிஞ்சான்குளம் வழிபாட்டு உரிமையான காந்தாரி அம்மன் சிலையை அரசே நிறுவ வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து இரட்டைமலை சீனிவாசன் 76-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ் நாட்டில் பஞ்சமி நிலங்கள் பிரச்சினை நிண்ட நாட்களாக கோரிக்கை மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வருகிறது . ஆனால் தமிழக அரசு அதைப் பற்றி பேசுவது இல்லை.
பஞ்சமி நிலம் என்பது நிலமற்ற பட்டியல் இன ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, 1892 ஆம் ஆண்டில் பிரித்தானியவின் இந்திய அரசால் ஒதுக்கப்பட்ட வேளாண் விளைநிலங்கள் ஆகும்.
பிரித்தானிய இந்திய அரசின், வருவாய்த்துறையின் பதிவேடுகளில், அனைத்து விளைநிலங்களை பஞ்சமி நிலம் என்று தனியாகவும் மற்ற நிலங்களை, நத்தம் நிலம், நன்செய், புன்செய், புறம்போக்கு என்று வகைப்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.