பாரா விளையாட்டு சங்கத்துடன் பேம் கிளப் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!

35 மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளித்து சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்க தயார்படுத்ததிட்டம் கோயம்புத்துார், பேம் கிளப் இயன்முறை பயிற்சி, உடல் நல கட்டமைப்பு, மறுவாழ்வு மற்றும் விளையாட்டு பயிற்சிகளில் பணியாற்றி வருகிறது.

இது, மாற்றுத்திறன் படைத்த விளையாட்டு வீரர்களுக்காக பயிற்சி அளிக்க பாரா ஸ்போர்ட்ஸ் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் இவர்களை பங்கேற்க செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு இலவச பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.

பேம் கிளப்பின் ஆலோசகர் மற்றும் விளையாட்டு பயிற்சியாளர், நிறுவனர் எம்.முருகபிரபு கூறுகையில், “கடந்த 2013ம் ஆண்டு முதல் பேம் கிளப் இந்த சேவையாற்றி வருகிறது. தற்போது முதல் முறையாக தமிழ்நாட்டில் இலவசமாக இயன்முறை சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் விளையாட்டு பயிற்சியை மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு அளிக்க உள்ளது.

35க்கும் மேற்பட்டோருக்கு வீல் சேரில் அமரும் வகையில் உள்ளோருக்கு கூடைபந்து, கைபந்து, ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டிற்கு பயிற்சி அளிக்கவுள்ளது. இந்த பயிற்சி கோயம்புத்துார் பாரா ஸ்போர்ட்ஸ் சங்கத்துடன் இணைந்து அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2024 வரை நடக்கும். இவர்கள் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உதவி செய்யப்படும்,” என்றார்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முருக பிரபு மற்றும் 5 பயிற்சியாளர்கள் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பர். இதற்கான நேரம் சங்கத்துடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும். பெண்களுக்கான பயிற்சி அளிக்க தனி பெண் பயிற்சியாளர் இருப்பார். திருச்சி ரோட்டில் 4000 சதுரடியில் உள்ள பேம் கிளப் அரங்கில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இந்த பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கோவை மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் ஜி.எஸ் சமீரன் முன்னிலையில், பேம் கிளப் நிறுவனர் எம். முருகபிரபு மற்றும் கோயம்புத்துார் பாரா ஸ்போர்ட்ஸ் சங்கத்தின் தலைவர் ஷர்மிளா ஆனந்த் ஆகியோர் கையெழுத்திடுவர்.கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஆர்.பி. ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டார்கள்.

மகாவீர் குழுமத்தின் தலைவர் பி. பாலச்சந்த், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் எஸ். பாபுஜி ராஜா பன்ஸ்லே, கேஜிஐஎஸ்எல் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அசோக் பக்தவத்சலம், கேஎம்சிஎச் டீன் டாக்டர் வி.குமரன், முன்னாள் சிறப்பு அரசு வழக்கறிஞர் என். சுந்தரவடிவேலு, கே.வி சுடலை முத்து அன்ட் கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.எஸ் பாலமுருகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.முருகபிரபு மற்றும் பேம் கிளப் பற்றி:

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

முருகபிரபு, இங்கிலாந்தில் உள்ள ஷெபீல்டு ஹாலன் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு காயங்கள் மேலாண்மை மற்றும் சிகிச்சை முறையில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். இங்கிலாந்து சுகாதார சேவை துறையில் பணியற்றிய பின், 2013 ல் இந்தியாவுக்கு வந்து, பேம் கிளப்பை துவக்கி நடத்தி வருகிறார்.

2013 ல் துவங்கப்பட்ட பேம் கிளப், விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. ஒவ்வொருவரையும் உடற்கட்டமைப்புடன் திகழ புனிதமான அணுகுமுறையை கையாண்டு வருகிறது.

– சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp