கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலைகளில்,தெரிவோரங்களில் நிறைய மன நோயாளிகள், ஆதரவற்ற முதியவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என கண்ணில் தென்படுவது நாம் பார்க்க முடிகிறது.
இவர்களுக்கு உணவு நேரத்திற்கு நேரம் இல்லை என்றாலும் ,முடிந்தவரை பொள்ளாச்சி மக்கள், சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த வரை உணவு நீர் போர்வை, ஆடை போன்றவற்றை கொடுப்பதை நாம் பார்க்க முடிகிறது.
அதிலும் சினிமாவில் வருவது போல் அதாவது கடைசி விவசாயி படத்தில் வரும் விஜய் சேதுபதி போலும், காசி படத்தில் வரும் விக்ரம் போலும் பொள்ளாச்சி காசி என்று அழைக்கும் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் இப்பகுதியில் சுற்றி வருகிறார். இவரிடம் யாரும் பேச முடியாது, உணவு கொடுத்தால் தண்ணீர் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் உணவை வாங்க மாட்டார் என்கிறார் சமூக ஆர்வலரும் நேதாஜி பேரவை தலைவர் நட்ராஜ். தொடர்ந்து நட்ராஜ் கூறுகையில் இவர் பெயர் குமரேசன் நாமக்கல் சேர்ந்தவர்,வயது சுமார் 60 இருக்கும் என்கிறார்.
பொள்ளாச்சி பிதாமகன் என்று அழைக்கபடும் இவரை,மேட்டுப்பாளையம் சேர்ந்த நிஷார் சேட்டு சமூக ஆர்வலரும், சாலை ஓரங்களில் சுற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு முடி திருத்தம் செய்யும் இவரை தொடர்ப்பு கொண்ட தன்னார்வலர் பவித்ரன், சமூக ஆர்வலர் நேதாஜி பேரவை தலைவர் வெள்ளை நட்ராஜ் ஆகியோர்,
நிஷார் சேட்டுவை பொள்ளாச்சி வரவழைத்து பொள்ளாச்சி காவல்துறை SI திரு.கருப்புசாமி திரு.ஆறுமுகம் ஒத்துழைப்புடன் நீண்ட நெடிய நேரத்திற்கு பிறகு பொள்ளாச்சி பிதாமகனுக்கு முடி திருத்தம் செய்யபட்டு ,குளிக்க வைத்து ஆடை அணிவிக்கபட்டு,பொதுமக்கள் ஒருவரால் காலனியும் வாங்கி கொடுத்து பொள்ளாச்சி பிதாமகன் இப்போது பார்பதற்கென படு ஜோர் ஆக இருக்கிறார்.
பொள்ளாச்சி பிதாமகனை முன்பு எல்லாம் பார்பதற்கு அஞ்சும் மக்கள் இப்போது சராசரி மனிதன் ஆக ஆகிவிட்டார் என்கிறார் வெள்ளை நடராஜ்.
பொள்ளாச்சியில் தற்போது இச்செயலை செய்த தன்னார்வலர்கள் பவித்திரன், நேதாஜி பேரவை தலைவர் வெள்ளை நட்ராஜ் ,மேட்டுப்பாளையம் நிஷார் சேட்டு பொள்ளாச்சி
காவல்துறை SI கருப்புசாமி, ஆறுமுகம் ஆகியோரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். நாளைய வரலாறு செய்தி பிரிவின் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.