மகாத்மா காந்தி நினைவகம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1934 ஆண்டு பிப்ரவரி 6 -7 தேதிகளில் கோவை போத்தனூர் பகுதியில் ஜிடி நாயுடு ஓட்டு வீட்டில் தங்கியுள்ளார் ஜிடி நாயுடு குடும்பத்தின் தலைவர் ஜிடி கோபால் அவர்கள் இந்த இல்லத்தை புனரமைத்து மகாத்மா நினைவகம் பணியினை மேற்கொண்டார் இந்த நினைவகம் வரும் 2 தேதி மகாத்மா காந்தி 153 பிறந்தநாளில் கிருஷ்ணம்மாள் காந்தியின்,
கருத்துகளால் ஈர்க்கபட்டவர் இந்த நினைவகத்தை திறக்கப்பட உள்ளார் இந்த நினைவகத்தில் அவர் பயன்படுத்திய மாதிரி தட்டு மாதிரி டம்ளர் இரண்டு செட் செருப்புகள் ராட்டை காந்தி ஜெபமாலை மூக்கு கண்ணாடி மர பேனாக்கள் கடிகாரம் கீதா புக் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன அதேபோல அவர் எழுதிய கடிதங்கள் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் மற்றும் தமிழ்நாட்டில் காந்தி. அமரஜோதி. காந்தி மலர். மனித வாழ்க்கை காந்தி. என புத்தகங்களும் இந்த நினைவகத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது இந்த நினைவகத்தில் ஆள் உயர உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது.
– சீனி,போத்தனூர்.