கோவை மாவட்டத்தில் 500க்கு மேற்பட்ட மாடு இறைச்சி கடைகள் உள்ளன. கோவை மாவட்டத்தில் இரண்டு இடத்தில் மாடு அறுவை மனைகள் செயல்பட்டு வருகிறது. மாட்டிறைச்சி கடைகளிலும் அறுவை மணைகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பணியாற்றி வருகின்றனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
13-09-2022 அன்று மாலை 7மணிக்கு கோவை போத்தனூரில் உள்ள ஃபாதிமாஸ் மண்டபத்தில் ஒருங்கிணைந்த சங்கம் உருவாக்க அழைப்பு விடுக்கப்பட்டு கோவை மாநகர் மாவட்ட மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கம் என்று துவங்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு JB.பஷீர் தலைமை தாங்கினார் SMB.ரஃபி, நிம்மதி இஸ்மாயில், பாபு, இசாக், சாதிக், தாஜ், திப்பு, அப்பாஸ் உடன் இருந்தனர். இக்கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட நபர்கள் உறுப்பினராக இனைந்தனர்.
சங்கத்திற்கு தலைவராக AS.அப்பாஸ் மற்றும் துனை தலைவராக துடியலுர் ஷாஜகான் மற்றும்19 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக கவுன்சிலர்கள் SA.காதர், அஸ்லம் பாஷா, குனசேகர் ஆகியோர் கலந்துகொண்டு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
-செய்யத் காதர், குறிச்சி.