கோவையில் மாநகராட்சி பள்ளியில் 9 மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதால் பள்ளியில் மாநகராட்சி அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒரே வகுப்பைச் சேர்ந்த 9 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவிகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாணவிகளுக்கு காய்ச்சலா அல்லது மாணவிகள் உண்ட உணவின் மூலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கோணத்தில் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல அந்தப் பள்ளியின் எட்டாம் வகுப்பு ஏ1 பிரிவில், காய்ச்சல் கேம்ப் அமைத்து பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பள்ளியில் தற்போது மாநகராட்சி துணை ஆணையாளர் சர்மிளா தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
.
திடீரென 9 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பள்ளியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் முகாம் அமைக்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது மூன்று பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் பள்ளியில் அறிகுறிகளோடு உள்ள மாணவிகளுக்கு பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.