லயன்ஸ் மாவட்டங்கள் 324 C மற்றும் 324 D இணைந்த ஒருங்கிணைப்பு கூட்டம்!!

தொடர்ந்து செய்து வரும் சேவைத்திட்டங்களை இன்னும் கூடுதலாக விரிவு படுத்தி செயல்படுத்தும் விதமாக லயன்ஸ் மாவட்டங்கள் 324 C மற்றும் 324 D இணைந்த ஒருங்கிணைப்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது.

பன்னாட்டு லயன்ஸ் சங்க 324 சி மற்றும் டி மாவட்டங்கள் சார்பாக பசிப்பிணி போக்குவது,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,மருத்துவ உதவி,அரசு பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு சமுதாய நலம் சார்ந்த சேவைத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சேவைதிட்டங்களை விரிவுபடுத்தி கூடுதலாக செய்யும் விதமாக, 324C லயன்ஸ் மாவட்டம் மற்றும் 324 D லயன்ஸ் மாவட்டம் இணைந்த ஒருங்கிணைப்பு கூட்டம் கோவை கோ இந்தியா ஆடிட்டோரியதில் நடைபெற்றது. 324C மாவட்ட ஆளுநர் ராம்குமார் மற்றும் 324 D மாவட்ட ஆளுநர் ஜான் பீட்டர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில், முதன்மை விருந்தினராக பன்னாட்டு இயக்குனர் மதனகோபால் கலந்து கொண்டார்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாவட்ட முதல் துணை ஆளுநர்கள் ஜெயசேகரன், மோகன்குமார் மற்றும் இரண்டாம் துணை ஆளுநர்கள் நித்தியானந்தம், சண்முக சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இதில்,கௌரவ விருந்தினர்களாக முன்னாள் பன்னாட்டு இயக்குனர்கள் ஜி.ஆர் என்கிற G.ராமசாமி ,கே.ஜி.ஆர் என்கிற KG.ராமகிருஷ்ணமூர்த்தி,

சம்பத், கூட்டு மாவட்ட தலைவர் கருணாநிதி முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் சாரதா பழனிச்சாமி ஆறுமுகம் மணி, காளி சாமி, நந்தபாலன், சண்முகம், முருகேசன், கருண பூபதி, நடராஜன், பாலகிருஷ்ணன், ஆறுமுகம், சசிகுமார், அழகு ஜெயபாலன், சிங்கை முத்து, ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இரு லயன்ஸ் மாவட்டங்களும் இணைந்து சேவை திட்ட பணிகளை விரிவாக்கம் செய்வது குறித்து பேசப்பட்டது.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பன்னாட்டு இயக்குனர் மதனகோபால், பசிப்பிணி போக்குவது, கண்ணோளி திட்டம், நீரிழிவு நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்ய உதவி, பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்துதல்,

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

பேரிடர் கால நலத்திட்ட உதவிகள் வழங்குவது என லயன்ஸ் மாவட்டங்கள் தொடர்ந்து சேவை திட்டங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும், இன்னும் கூடுதலாக பசிப்பிணி போக்கும் திட்டத்தில் தனியாக ஒரு வாகனத்தில் வைத்து பல இடங்களுக்கு சென்று உணவு வழங்கும் திட்டம் துவங்க உள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் லயன்ஸ் 324 சி மாவட்ட செய்தி தொடர்பு தலைவர் செந்தில் குமார் மற்றும் இரு மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் ராஜ் மோகன், ராமலிங்கம், சுப்ரமணியன், கனகராஜ்,ஜோசப் ராஜா, ரமணன் உட்பட மண்டல, வட்டார, திட்ட தலைவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து லயன் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சங்க விரிவாக்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் இனிதே தொகுத்து வழங்கினார்.

– சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp