கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி துப்புரவு பணிக்கு செல்லும் பணியாளர்களை இன்று காலை சந்தித்த
வால்பாறை நகர்மன்ற தலைவர் திருமதி S. அழகு சுந்தரவள்ளிசெல்வம்
பணியாளர்களுக்கு மழை காலத்தில் தேவையான ரெயின் கோட் வழங்கினார்.
மேலும் துப்புறவு பணி சரியான முறையில் அனைத்து பகுதிகளிலும் நடைபெறுகிறதா என்பதைப் பற்றியும் கேட்டறிந்தார்.
பின்பு துப்புரவு பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு தேவையான முக கவசம் மற்றும் கைக்கவசம் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் பணியாளர்களிடம் விசாரித்தார்.
துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் திரு பாலு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் திரு செல்வம், நகராட்சி துப்பரவு ஆய்வாளர் திரு செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-M.சுரேஷ்குமார்.