கோவை மாநகராட்சி 86வது வார்டிற்க்கு உட்பட்ட பகுதிகளில் மண்டல தலைவர் திருமதி தனலட்சுமி அவர்கள் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. 86வது வார்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து நிரந்தர மருத்துவர்கள் நியமனம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.
குப்பையும் சகதியுமாக உள்ள இராஜ வாய்க்காலை ஆய்வு செய்து தூர் வாருவதற்க்கு இடையூராக சூப்பர் கார்டன், சூப்பர் அவென்யூ, பொன்விழா நகர், குழந்தை கவுண்டர் வீதி, இராயல் நகர், திப்பு நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். செல்லா ராவுத்தர் வீதியில் பயன்பாடு இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து சீரமைப்பு செய்திட உத்தரவிட்டார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆசாத் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையை இரண்டாகப் பிரித்து புதிதாக கட்டிடம் கட்ட உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டார், மேலும் ஆசாத் நகர் பகுதியில் மைதானத்தில் தேங்கும் குப்பைகளை உடனடியாக அகற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வில் தெற்கு மண்டல உதவி ஆணையாளர் அண்ணாதுரை அவர்கள், 86வது வார்டு மாமன்ற உறுப்பினர் இ. அஹமது கபீர் MC அவர்கள், ATPO சத்யா அவர்கள், AEE கருப்புசாமி அவர்கள், SO ராமு அவர்கள், PWD AE சிவக்குமார் அவர்கள், வார்டு AE கணேசன் அவர்கள், சுகாதார ஆய்வாளர் தனபால் அவர்கள், சூப்பர்வைசர் மணிகண்டன் அவர்கள், தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், திமுக பகுதி செயலாளர் ஜெய்லாபுதீன், தமுமுக நிர்வாகிகள் ஆசிக் அகமது, அசாருதீன், ஜுபைர் கான், ரியாஸ், காஜா, முத்தலிப், சித்திக், முனீர், ஷானவாஸ், ரபீக், ஜாஹிர், ஜெய்லானி திமுக நிர்வாகிகள் குத்புதீன், ஜாபர் அலி, அஷ்ரப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முஜீப் செல்வபுரம் கோவை