மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பின் படி 22.08.2022 தேதியிட்ட கடிதத்தின்படி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கியமான 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினார்.
தமிழக முதல்வர் அவர்கள் கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் நிண்ட நாள் தொகுதியில் உள்ள குறைகளைக் 10 கோரிக்கை மனுவை அளிக்க வேண்டும் என்று அறிவித்தார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அவர்கள் தமிழக எதிர் காட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் அனுமதி பெற்று கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கியமான 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.
அந்த மனுவில் உள்ள 10 கோரிக்கைகள் :
1. கோவில்பட்டி தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
2. கோவில்பட்டி ஓடையில் தடுப்பு சுவர் அமைத்தல்
3. கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கல்லூரி அமைத்தல்.
4. கோவில்பட்டியில் அரசு செவிலியர் கல்லூரி அமைத்தல்.
5. எலுமிச்சை குளிர்சாதன கிடங்கு அமைத்தல்.
6.கயத்தார் தீ அனைப்பு நிலையம்.
7.கயத்தார் தாலுகா மருத்துவமனை
8.கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளகாம் மற்றும் அரசினர் விருந்தினர் மாளிகை அமைத்தல்.
9. கோவில்பட்டி நகர சாலைப்பணிகள்.
10. தனி குடிநீர் திட்டம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.