உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருந்ததற்காக அறிவியல்பூர்வ ஆதாரமில்லை என்று வாரணாசி நீதிமன்றம் தெரிவித்துள்ளது!
கியான்வாபி மசூதியில் முகம் கை கால்களை சுத்தம் செய்ய நீர் தேக்தி வைக்கும் தொட்டியில் நீர் ஊற்று கல்லை சிவலிங்கம் என்று சொல்லி அதன் பழமையை அறிய கார்பன் டேட்டிங் முறையில் பரிசோதனை செய்ய வேண்டுமென்ற 5 இந்து பெண்களின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது,
உத்தரப் பிரதேசம் – வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியபடி அமைந்துள்ளது பழமை வாய்ந்த கியான்வாபி மசூதி. அங்கு கோவில் இருந்ததாகவும் அங்கிருந்த கோயிலை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவுரங்கசீப், அங்கு மசூதி கட்டியதாகக் சில இந்து அமைப்புகள் கூறிவருகிறது, இதன் மீதான வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் இருக்கும் சிங்காரக் கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்று 5 இந்துப் பெண்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.
கியான்வாபி மசூதியில் நடத்தி முடிக்கப்பட்ட கள ஆய்வில், அங்குள்ள ஒஜுகானாவின் (முகம் கால் சுத்தம் செய்யும் இடம்) நடுவில் நீர் ஊற்று என்னும் ஃபவுண்டைன் யை சிவலிங்கம் என்று கூறப்பட்டது இதனால், ஓசுகானாவை சீல் வைக்க வாராணாசி சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் இந்துப் பெண்கள் ஐவரும் கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தை கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரினர். மசூதிக்குள் இந்துக் கடவுளரின் மேலும் பல சிலைகள் இருப்பதாகவும் கூறினார்கள். இந்நிலையில், இந்த மனுவை வாரணாசி நீதிமன்றம் (14-10-2022) அன்று விசாரித்து மனுவை தடை செய்துள்ளது.
மேலும் கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருந்ததற்காக அறிவியல்பூர்வ ஆதாரமில்லை என்று வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-செய்யத் காதர்- குறிச்சி.