தாராபுரத்தை அடுத்த குண்டடம், கொக்கம்பாளையத்தை சேர்ந்தவர் காளிதாஸ். தனக்கு சொந்தமான தோட்டத்தில், 3,500 சதுர அடி பரப்பளவில், கோழிப்பண்ணை அமைத்து, தனியார் நிறுவன கோழிகளை வளர்த்து வருகிறார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த இரு நாட்களாக கொக்கம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது வருவதால் காளிதாஸ் அவர்களுக்கு சொந்தமான கோழிப்பண்ணை திடீரென சரிந்து விழுந்தது.
இதில் பண்ணையில் இருந்த, 1,500 கோழிகளும் பலியாகி விட்டன. சரிந்து விழுந்த பண்ணை, கோழிகளின் மதிப்பு, பல லட்சம் ரூபாய் இருக்கும் எனத் தெரிகிறது. பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி நடராஜன், லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.